×
آل عمرانவசனம் 180

அல்-முக்தஸர்

وَلَا يَحْسَبَنَّ ٱلَّذِينَ يَبْخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا۟ بِهِۦ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿١٨٠﴾

அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அருட்கொடைகளில் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையைத் தடுத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள், அதனைத் தங்களுக்கு நல்லதென எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீங்காகும். மறுமைநாளில் அவர்கள் கஞ்சத்தனம் செய்த பொருட்கள் அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு வேதனைப்படுத்தப்படுவார்கள். வானங்களிலும் பூமியிலும் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. படைப்புகள் அனைத்தும் அழிந்த பிறகும் அவன் என்றென்றும் நிலைத்திருப்பான். நீங்கள் செய்யும் நுனுக்கமானவற்றையும் அல்லாஹ் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.