×
آل عمرانவசனம் 190

அல்-முக்தஸர்

إِنَّ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ لَـَٔايَـٰتٍ لِّأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ ﴿١٩٠﴾

வானங்களும் பூமியும் முன்மாதிரியின்றி இல்லாமையிலிருந்து படைக்கப்பட்டிருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும், அவ்விரண்டின் நீண்ட, குறுகிய நேர ஏற்றத்தாழ்விலும் அறிவுடைய மக்களுக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. அவை, அல்லாஹ் ஒருவன்தான் பிரபஞ்சத்தைப் படைத்தவன். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றன.