அல்-முக்தஸர்
ٱلَّذِينَ يَذْكُرُونَ ٱللَّهَ قِيَـٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِى خَلْقِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ ﴿١٩١﴾
அவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் என எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூருகிறார்கள். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பில் சிந்தனை செலுத்தி பின்வருமாறு கூறுவார்கள்: “அல்லாஹ்வே! நீ இந்தப் பெரும் படைப்புகளையெல்லாம் வீணாகப் படைக்கவில்லை. வீணாகப் படைப்பதை விட்டும் நீ தூய்மையானவன். நற்செயல்கள் செய்வதற்கு பாக்கியம் அளித்து தீய செயல்களிலிருந்து எங்களைப் பாதுகாத்து நரக வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக”.