அல்-முக்தஸர்
فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ ۖ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَـٰنِ ٱلرَّجِيمِ ﴿٣٦﴾
கர்ப்ப காலம் நிறைவடைந்தபோது அவள் தன் வயிற்றிலுள்ளதைப் பெற்றெடுத்தாள் - அவள் ஆண்குழந்தையை எதிர்பார்த்திருந்தாள் - அப்போது அவள், “என் இறைவா! நான் பெண்குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே!” என்றாள். அவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தால் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எதிர்பார்த்த ஆண் ஆற்றலிலும் தோற்றத்திலும் அவர்களுக்குக் கிடைத்த பெண்ணைப் போலல்ல. “நான் அதற்கு மர்யம் என்று பெயர் சூட்டினேன். உன் அருளை விட்டும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் இந்த குழந்தைக்கும் இந்த குழந்தையின் சந்ததிகளுக்கும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் அவள் கூறினாள்.