×
آل عمرانவசனம் 37

அல்-முக்தஸர்

فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا ٱلْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَـٰمَرْيَمُ أَنَّىٰ لَكِ هَـٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ ۖ إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ ﴿٣٧﴾

அவளது நேர்ச்சையை அல்லாஹ் அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக் குழந்தையை நல்லமுறையில் வளரச் செய்தான். அவனது நல்லடியார்களின் உள்ளங்களை அந்தக் குழந்தை மீது அன்புகொள்ளச்செய்தான். மர்யமுக்கு ஸகரிய்யாவை பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மர்யமின் தொழுமிடத்திற்குச் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மையான உணவைக் காண்பார். அவளிடம் கேட்பார், “மர்யமே இந்த உணவு உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” அதற்கு மர்யம் கூறுவாள், “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உணவாகும். அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றி தாராளமாக வழங்குகிறான்.