×
آل عمرانவசனம் 38

அல்-முக்தஸர்

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُۥ ۖ قَالَ رَبِّ هَبْ لِى مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ ٱلدُّعَآءِ ﴿٣٨﴾

வழக்கத்திற்கு மாறாக அல்லாஹ் மர்யமுக்கு உணவளித்ததைக் கண்ட ஸகரிய்யா அவன் தனக்கும் - இந்த தள்ளாத வயதிலும், மனைவி மலடியாக இருந்தபோதும் - ஒரு குழந்தையை வழங்குவான் என்று நம்பிக்கை வைத்தார். “என் இறைவனே! தூய்மையான ஒரு ஆண்மகனை எனக்குத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன்னிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நிலையை நன்கறிந்தவன்” என்று பிரார்த்தனை செய்தார்.