×
آل عمرانவசனம் 44

அல்-முக்தஸர்

ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ ٱلْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَـٰمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ ﴿٤٤﴾

தூதரே! மேலே கூறப்பட்ட ஸகரிய்யா மற்றும் மர்யமைப் பற்றிய செய்திகள் மறைவான செய்திகளாகும். நாமே இவற்றை உமக்கு அறிவிக்கின்றோம். மர்யமை யார் பராமரிப்பது? என்ற விஷயத்தில் ஏற்பட்ட போட்டியால் அவர்களிலுள்ள அறிஞர்களும் நல்லவர்களும் சீட்டு குலுக்கி அவர்களது எழுதுகோல்களை போட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. சீட்டு குலுக்கிப்போடப்பட்டபோது ஸகரிய்யாவின் எழுதுகோலே வென்றது.