×
آل عمرانவசனம் 45

அல்-முக்தஸர்

إِذْ قَالَتِ ٱلْمَلَـٰٓئِكَةُ يَـٰمَرْيَمُ إِنَّ ٱللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ٱسْمُهُ ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ وَجِيهًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمِنَ ٱلْمُقَرَّبِينَ ﴿٤٥﴾

தூதரே! பின்வரும் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக: “வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள், “அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர் தந்தையின்றி, அல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’- ‘ஆகிவிடு’ என்பதைக்கொண்டு படைக்கப்படுவார். அவரது பெயர் ஈசா இப்னு மர்யம் ஆகும். அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருப்பார்.