அல்-முக்தஸர்
وَيُكَلِّمُ ٱلنَّاسَ فِى ٱلْمَهْدِ وَكَهْلًا وَمِنَ ٱلصَّـٰلِحِينَ ﴿٤٦﴾
பேசும் பருவத்தை அடையாத சிறுகுழந்தையாக இருக்கும்போதே அவர் மக்களிடம் பேசுவார். முழுமையான பலத்தையும் ஆண்மையையும் பெற்று அவர் பெரியவரான பிறகும் மக்களிடம் பேசுவார். அவர்களின் உலக மற்றும் மார்க்க விஷயங்களில் நன்மையானவற்றை அவர்களுக்குக் கூறுவார். சொல்லிலும் செயலிலும் நல்லவராகவும் இருப்பார்.