அல்-முக்தஸர்
وَرَسُولًا إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنِّى قَدْ جِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ ۖ أَنِّىٓ أَخْلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًۢا بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ وَأُحْىِ ٱلْمَوْتَىٰ بِإِذْنِ ٱللَّهِ ۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِى بُيُوتِكُمْ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٤٩﴾
அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு தூதராகவும் ஆக்குவான். அவர் அவர்களிடம் கூறுவார்: “நான் உங்களின்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். என் தூதுத்துவத்தை உண்மை என நிருபிக்கக்கூடிய சான்றுகளையும் நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். அவை, நான் களிமண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப் போல் உண்டாக்குவேன். நான் அதில் ஊதியதும் அது அல்லாஹ்வின் அனுமதியால் உயிருள்ள பறவையாகிவிடும். பிறவிக்குருடனைக் குணமாக்குவேன், அவன் பார்வைபெற்றுவிடுவான். தொழுநோயாளியையும் நான் குணப்படுத்துவேன். அவரது தோல் ஆரோக்கியம் பெற்றுவிடும். மரணித்தவர்களை உயிர்த்தெழச் செய்வேன். இவையனைத்தும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டே நடக்கும். நீங்கள் உண்ணும் உணவையும், வீட்டில் மறைத்துவைத்த உணவுப்பொருளையும் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன். நான் குறிப்பிட்டவைகள் மனிதர்களால் செய்ய முடியாத பெரும் காரியங்களாகும். நீங்கள் ஈமானை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், சான்றுகளை உண்மைப்படுத்தக்கூடியவர்களாக இருந்தால் இவையனைத்தும் நான் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்பதற்கான தெளிவான சான்றுகளாகும்.