அல்-முக்தஸர்
وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ ٱلَّذِى حُرِّمَ عَلَيْكُمْ ۚ وَجِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ ﴿٥٠﴾
அதேபோன்று எனக்கு முன்னால் இறங்கிய தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியவனாகவும், உங்கள் சிரமத்தை நீக்குவதற்காக உங்கள் மீது இதற்கு முன் தடைசெய்யப்பட்ட சிலவற்றை ஆகுமாக்கி வைப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். நான் கூறும் விஷயத்திற்கு தெளிவான சான்றுகளைக் கொண்டு நான் உங்களிடம் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். நான் உங்களை அழைக்கும் விஷயத்தில் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.