×
آل عمرانவசனம் 55

அல்-முக்தஸர்

إِذْ قَالَ ٱللَّهُ يَـٰعِيسَىٰٓ إِنِّى مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَجَاعِلُ ٱلَّذِينَ ٱتَّبَعُوكَ فَوْقَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۖ ثُمَّ إِلَىَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ ﴿٥٥﴾

அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் சூழ்ச்சி செய்தான். அவன் ஈசாவிடம் கூறினான்: “ஈசாவே! மரணிக்கச் செய்யாமல் உம்மை நான் கைப்பற்றுவேன். உம் உடலையும் ஆன்மாவையும் என் பக்கம் உயர்த்துவேன். உம்மை நிராகரித்தவர்களின் அழுக்குகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். அவர்களை விட்டும் உம்மை தூரமாக்குவேன். முஹம்மதின்மீது நம்பிக்கை கொள்வது உட்பட சத்திய மார்க்கத்தில் உம்மைப் பின்பற்றியவர்களை உம்மை நிராகரித்தவர்களைவிட ஆதாரத்தைக் கொண்டும் கண்ணியத்தைக் கொண்டும் மறுமை நாள்வரை மேலோங்கச் செய்வேன். பின்பு மறுமையில் நீங்கள் என்னிடத்தில்தான் வரவேண்டும். அப்போது நீங்கள் கருத்துவேறுபாடுகொண்ட விஷயங்களில் உங்களிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்.