அல்-முக்தஸர்
فَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوا۟ فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِى ٱلدُّنْيَا وَٱلْـَٔاخِرَةِ وَمَا لَهُم مِّن نَّـٰصِرِينَ ﴿٥٦﴾
உம்மையும் நீர் கொண்டுவந்த சத்தியத்தையும் நிராகரித்தவர்களை இவ்வுலகில் கொலை செய்யப்படுதல், கைதிகளாகப் பிடிக்கப்படுதல், இழிவுபடுத்தப்படுதல் போன்ற வேதனைகளைக் கொண்டும் மறுவுலகில் நரக வேதனையைக் கொண்டும் வேதனை செய்வேன். வேதனையிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.