×
آل عمرانவசனம் 57

அல்-முக்தஸர்

وَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ ۗ وَٱللَّهُ لَا يُحِبُّ ٱلظَّـٰلِمِينَ ﴿٥٧﴾

உம்மீதும் நீர் கொண்டுவந்த சத்தியத்தின்மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் சம்பாதித்தவற்றுக்கான முழுமையான கூலியை குறைவின்றி வழங்கிடுவான். (இது முஹம்மது நபியின் தூதுத்துவத்திற்கு முன்னால் ஈசாவைப் பின்பற்றியவர்கள் தொடர்பான செய்தியாகும். அந்த ஈசாதான் முஹம்மது நபியைக் குறித்து நற்செய்தி கூறினார்) அல்லாஹ் அநியாயக்காரர்களை விரும்ப மாட்டான். மிகப் பெரிய அநியாயம், அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது மற்றும் அவனுடைய தூதர்களை நிராகரிப்பதாகும்.