அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ ٱللَّهِ وَأَيْمَـٰنِهِمْ ثَمَنًا قَلِيلًا أُو۟لَـٰٓئِكَ لَا خَلَـٰقَ لَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿٧٧﴾
தன் வேதத்தில் இறக்கியதையும், தான் அனுப்பிய தூதர்களையும் பின்பற்றுமாறு அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவுரையையும் ,அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகச் செய்த சத்தியங்களையும் இவ்வுலகின் அற்ப ஆதாயத்திற்குப் பகரமாக மாற்றிவிடுபவர்களுக்கு மறுமையின் நன்மையில் எந்தப் பங்கும் இல்லை. மறுமை நாளில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைக் கொண்டு அல்லாஹ் அவர்களிடம் பேசமாட்டான். அவர்களைக் கருணையோடு பார்க்க மாட்டான். அவர்களின் பாவம் மற்றும் நிராகரிப்பு ஆகிய அழுக்குகளிலிருந்து பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது.