×
آل عمرانவசனம் 78

அல்-முக்தஸர்

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُۥنَ أَلْسِنَتَهُم بِٱلْكِتَـٰبِ لِتَحْسَبُوهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَمَا هُوَ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ ﴿٧٨﴾

யூதர்களில் சிலர் தவ்ராத்தில் உள்ளதைப் படிப்பதைப் போன்று அதில் இல்லாததையும் தமது நாவுகளை வளைத்து படிக்கிறார்கள், அவர்கள் தவ்ராத்திலிருந்துதான் படிக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவை தவ்ராத்தில் இல்லை. மாறாக தாங்கள் இட்டுக்கட்டிய பொய்களைத்தான் படிக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வராததைப் படித்துவிட்டு, நாங்கள் படிப்பது அல்லாஹ் இறக்கிய வேதத்தைத்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின்மீதும் அவன் தூதர்கள்மீதும் பொய்யுரைக்கிறோம் என அறிந்துகொண்டே அவன் மீது பொய்கூறுகிறார்கள்.