×
آل عمرانவசனம் 79

அல்-முக்தஸர்

مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ ٱللَّهُ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا۟ عِبَادًا لِّى مِن دُونِ ٱللَّهِ وَلَـٰكِن كُونُوا۟ رَبَّـٰنِيِّـۧنَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ ٱلْكِتَـٰبَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ ﴿٧٩﴾

ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும் சரியான புரிதலையும் அளித்து அவரைத் தூதராகவும் தேர்ந்தெடுத்தபின் அவர் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறமாட்டார். மாறாக அவர், “நீங்கள் மக்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பதனாலும் அதனைக் கற்பதனாலும் அதன்படி செயல்படக்கூடிய அறிஞர்களாகவும் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் ஆகிவிடுங்கள்” என்றே கூறுவார்.