அல்-முக்தஸர்
فِيهِ ءَايَـٰتٌۢ بَيِّنَـٰتٌ مَّقَامُ إِبْرَٰهِيمَ ۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًا ۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَـٰلَمِينَ ﴿٩٧﴾
இந்த ஆலயத்தில் அதன் சிறப்பினை எடுத்துரைக்கும் புனிதச் சின்னங்கள் வழிபாட்டுத் தளங்கள் போன்ற வெளிப்படையான அடையாளங்கள் இருக்கின்றன. இப்ராஹீம் கஃபாவின் சுவரை உயர்த்த நாடியபோது நின்ற கல்லும் அந்த அடையாளங்களில் உள்ளவையாகும். அவற்றுள், அங்கு நுழைந்தவர் அச்சம்கொள்ளமாட்டார், அவருக்கு எந்த நோவினையும் கொடுக்கப்படமாட்டாது என்பதும் உள்ளடங்கும். மனிதர்களில் அந்த ஆலயத்திற்குச் சென்றுவர சக்திபெற்றவர்மீது ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றுவதற்கு அங்கு செல்வது அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமையாகும். ஹஜ் கடமையை மறுத்தவர் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டார். இத்தகைய நிராகரிப்பாளர்களை விட்டும், உலகத்தார் அனைவரையும் விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.