×
آل عمرانவசனம் 98

அல்-முக்தஸர்

قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَكْفُرُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَٱللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا تَعْمَلُونَ ﴿٩٨﴾

தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, முஹம்மது நபியின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்தக்கூடிய தெளிவான ஆதாரங்களை ஏன் மறுக்கிறீர்கள்? அவற்றில் சில ஆதாரங்கள் தவ்ராத்திலும், இன்ஜீலிலும் கூட இடம்பெற்றுள்ளன. உங்களின் இந்த செயல்களை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.