×
آل عمرانவசனம் 99

அல்-முக்தஸர்

قُلْ يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لِمَ تَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ مَنْ ءَامَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنتُمْ شُهَدَآءُ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿٩٩﴾

தூதரே! நீர் கூறுவீராக: “வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிருஸ்தவர்களே, உங்கள் வேதங்களில் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையான மார்க்கம் இதுதான் என்று நீங்கள் சாட்சி கூறிக்கொண்டே அல்லாஹ்வின் மார்க்கத்தின்மீது நம்பிக்கைகொண்ட மனிதர்களை ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுக்கின்றீர்கள்? அவனுடைய மார்க்கம் சத்தியத்திலிருந்து அசத்தியத்தின் பக்கம் சாய்வதையும் அதனை ஏற்றுக்கொண்டோர் நேர்வழியைவிட்டும் வழிகேட்டின் பக்கம் சாய்வதையுமா நீங்கள் விரும்புகிறீர்கள்? அல்லாஹ்வை நிராகரித்தல், அவனது பாதையை விட்டுத் தடுத்தல் ஆகிய நீங்கள் செய்யும் காரியங்களைஅவன் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குத் தண்டனை வழங்குவான்.