×
النساءவசனம் 102

அல்-முக்தஸர்

وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ ۗ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَٰحِدَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ ۖ وَخُذُوا۟ حِذْرَكُمْ ۗ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَـٰفِرِينَ عَذَابًا مُّهِينًا ﴿١٠٢﴾

தூதரே! போர்ச்சமயத்தில் நீர் படையில் இருந்து அவர்களுக்குத் தொழுகை நடத்த விரும்பினால் அவர்களை இரண்டு அணியினராக பிரித்துக் கொள்வீராக. ஒரு அணியினர் உம்முடன் தொழுவதற்காக நிற்கட்டும். தங்களுடைய ஆயுதங்களையும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். மற்றொரு அணியினர் உங்களைப் பாதுகாக்கட்டும். முதல் அணியினர் இமாமுடன் ஒரு ரக்அத் தொழுதபிறகு இரண்டாவது ரக்அத்தை தாமாகவே நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தொழுதவுடன் உங்களுக்குப் பின்னாலிருந்து எதிரிகளின் திசையை நோக்கி நிற்கட்டும். உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இரண்டாவது அணியினர் வந்து இரண்டாவது ரக்அத்தில் இமாமுடன் இணைந்துகொள்ளட்டும். இமாம் சலாம் கொடுத்தபிறகு அவர்கள் மீதமுள்ள ஒரு ரக்அத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டும். அவர்கள் தங்களின் ஆயுதங்களை வைத்துக் கொண்டு எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கட்டும். நிராகரிப்பாளர்கள் நீங்கள் உங்களின் ஆயுதங்களையும் தளபாடங்களையும் விட்டு கவனக்குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களைத் திடீரெனத் தாக்கிவிடலாம் என்று ஆசைகொள்கிறார்கள். மழையினாலோ உங்களுக்கு ஏற்பட்ட நோயினாலோ நீங்கள் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உங்கள்மீது எவ்விதக் குற்றமுமில்லை. உங்களால் இயன்றவற்றின் மூலம் உங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் வேதனையைத் தயார்செய்து வைத்துள்ளான்.