×
النساءவசனம் 103

அல்-முக்தஸர்

فَإِذَا قَضَيْتُمُ ٱلصَّلَوٰةَ فَٱذْكُرُوا۟ ٱللَّهَ قِيَـٰمًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِكُمْ ۚ فَإِذَا ٱطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ ۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتْ عَلَى ٱلْمُؤْمِنِينَ كِتَـٰبًا مَّوْقُوتًا ﴿١٠٣﴾

நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகையிலிருந்து நிறைவேற்றிவிட்டால் நின்றநிலையிலும் அமர்ந்தநிலையிலும் ஒருக்களித்துப் படுத்தநிலையிலும் - என எல்லா நிலைகளிலும் துதித்துப் புகழ்வதன் மூலம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். பயம் உங்களைவிட்டு நீங்கி அமைதிநிலை ஏற்பட்டுவிட்டால் தொழுகையை அதன் நிபந்தனைகளோடும் கடமைகளோடும் சுன்னத்துக்களோடும் உங்களுக்குக் கட்டளையிட்டபடி முழுமையாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக தொழுகை நம்பிக்கையாளர்கள்மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும். எனவே காரணமின்றி அதனைத் தாமதப்படுத்திவிடாதீர்கள். இது ஊரில் உள்ள சமயத்திற்குரிய சட்டமாகும். ஆனால் பயண சமயத்தில் நீங்கள் சேர்த்தும் சுருக்கியும் தொழுதுகொள்ளலாம்.