அல்-முக்தஸர்
وَلَا تَهِنُوا۟ فِى ٱبْتِغَآءِ ٱلْقَوْمِ ۖ إِن تَكُونُوا۟ تَأْلَمُونَ فَإِنَّهُمْ يَأْلَمُونَ كَمَا تَأْلَمُونَ ۖ وَتَرْجُونَ مِنَ ٱللَّهِ مَا لَا يَرْجُونَ ۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا ﴿١٠٤﴾
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களான உங்களது எதிரிகளைத் தேடுவதில் பலவீனமடைந்து விடாதீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்களினாலும் காயங்களினாலும் நீங்கள் வலியை உணர்ந்தால் உங்களைப்போல நிராகரிப்பாளர்களும் வலியை உணரத்தான் செய்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்டதுபோன்று அவர்களுக்கும் ஏற்பட்டே உள்ளது. அவர்களின் பொறுமை உங்களின் பொறுமையைவிட அதிகமாகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்விடம் எதிர்பார்க்காத உதவியையும் நன்மையையும் நீங்கள் அவனிடம் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் தன் அடியார்களின் நிலமைகளை நன்கறிந்தவன். தனது நிர்வாகத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.