×
النساءவசனம் 122

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَنُدْخِلُهُمْ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۖ وَعْدَ ٱللَّهِ حَقًّا ۚ وَمَنْ أَصْدَقُ مِنَ ٱللَّهِ قِيلًا ﴿١٢٢﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தரும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் மாளிகைகளுக்குக் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும். அவனுடைய வாக்குறுதி உண்மையாகும். அவன் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறுசெய்வதில்லை. அல்லாஹ்வைவிட சொல்லில் உண்மையானவன் யாரும் இல்லை.