அல்-முக்தஸர்
لَّيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَآ أَمَانِىِّ أَهْلِ ٱلْكِتَـٰبِ ۗ مَن يَعْمَلْ سُوٓءًا يُجْزَ بِهِۦ وَلَا يَجِدْ لَهُۥ مِن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا ﴿١٢٣﴾
முஸ்லிம்களே! பாதுகாப்பும் வெற்றியும் நீங்கள் விரும்புவது போன்றோ வேதக்காரர்கள் விரும்புவது போன்றோ அல்ல. அது செயல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். உங்களில் தீய செயல் புரிந்தவர் மறுமை நாளில் கூலி வழங்கப்படுவார். அல்லாஹ்வைத் தவிர பயனளிக்கும் வேறு பொறுப்பாளனையோ அவரை விட்டு துன்பத்தை அகற்றும் உதவியாளனையோ அவர்கள் பெற மாட்டார்கள்.