×
النساءவசனம் 146

அல்-முக்தஸர்

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَٱعْتَصَمُوا۟ بِٱللَّهِ وَأَخْلَصُوا۟ دِينَهُمْ لِلَّهِ فَأُو۟لَـٰٓئِكَ مَعَ ٱلْمُؤْمِنِينَ ۖ وَسَوْفَ يُؤْتِ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا ﴿١٤٦﴾

ஆயினும் தமது நயவஞ்சகத்திலிருந்து பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தங்கள் உள்ளத்தை சீர்படுத்தி, அவனிடம் செய்த வாக்குறுதியைப் பேணி தங்களின் செயல்களை முகஸ்துதி இன்றி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களைத் தவிர. இந்த பண்புகளை உடையவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நம்பிக்கையாளர்களுடன் இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் பெரும் கூலியை வழங்கிடுவான்.