அல்-முக்தஸர்
مَّا يَفْعَلُ ٱللَّهُ بِعَذَابِكُمْ إِن شَكَرْتُمْ وَءَامَنتُمْ ۚ وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمًا ﴿١٤٧﴾
நீங்கள் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுக்கு நன்றி செலுத்தினால் அவனுக்கு உங்களை வேதனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவன் நன்மைகளை வழங்குபவன், மிகுந்த கருணையாளன். உங்களின் பாவங்களின் காரணமாகத்தான் அவன் உங்களைத் தண்டிக்கிறான். நீங்கள் உங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டால், அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தினால், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அவன்மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டான். அவனுடைய அருட்கொடைகளை ஒத்துக் கொள்வேருக்கு நன்றியுடையவன். எனவேதான், அதற்காக அவர்களுக்கு நன்மையை அள்ளிவழங்குகிறான். தனது படைப்பினங்களின் ஈமானை நன்கறிந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான்.