×
النساءவசனம் 152

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ وَلَمْ يُفَرِّقُوا۟ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ أُو۟لَـٰٓئِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا ﴿١٥٢﴾

அல்லாஹ்வை ஈமான்கொண்டு அவனை ஒருமைப்படுத்தி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவன் அனுப்பிய தூதர்கள் அனைவரையும் - நிராகரிப்பாளர்கள் செய்வதுபோன்று அவர்களிடையே பாகுபாடு காட்டாமல் - உண்மைப்படுத்தியவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை மற்றும் அதனூடாக வெளிப்பட்ட நற்செயல்களுக்குக் கூலியாகப் பெரும் நன்மையை அல்லாஹ் வழங்கிடுவான். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.