×
النساءவசனம் 153

அல்-முக்தஸர்

يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَـٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَـٰبًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ فَقَدْ سَأَلُوا۟ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓا۟ أَرِنَا ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ ٱلصَّـٰعِقَةُ بِظُلْمِهِمْ ۚ ثُمَّ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ فَعَفَوْنَا عَن ذَٰلِكَ ۚ وَءَاتَيْنَا مُوسَىٰ سُلْطَـٰنًا مُّبِينًا ﴿١٥٣﴾

தூதரே! யூதர்கள் உம்மிடம், “நீர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாக மூஸாவுக்கு நிகழ்ந்தது போல் வானத்திலிருந்து ஒரேயடியாக ஒரு வேதத்தை அவர்களுக்கு இறக்கிக்காட்டுமாறு வேண்டுகின்றனர். இவ்வாறான அவர்களது வேண்டுதலை நீர் பெரிதாக எண்ண வேண்டாம். ஏனெனில் இவர்களின் முன்னோர்கள் மூஸாவிடம், அல்லாஹ்வைக் கண்ணெதிரில் காட்டுங்கள் என இவர்கள் கேட்டதை விட பெரிய விஷயத்தைக் கேட்டனர். அவர்கள் செய்த இக்காரியத்துக்குத் தண்டனையாக மயக்கமுற்று வீழ்ந்தனர். பின்னர் அல்லாஹ் அவர்களை உயிர்த்தெழச் செய்தான். அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன், அவனே படைத்துப் பராமரிக்கக்கூடியவன் என்பதை எடுத்துரைக்கக்கூடிய தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்னரும் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து காளைக் கன்றை வணங்கினர். அதன் பின்னரும் நாம் அவர்களை மன்னித்தோம். தன் சமூகத்தினருக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நாம் மூஸாவுக்கு வழங்கினோம்.