அல்-முக்தஸர்
وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَـٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَـٰقًا غَلِيظًا ﴿١٥٤﴾
அவர்களிடம் செய்யப்பட்டிருந்த உறுதியான உடன்படிக்கைப் பிரகாரம் அவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக, அவர்களை அச்சமூட்டும் பொருட்டு மலையை அவர்கள் மீது உயர்த்திவிட்டு, நாம் அவர்களிடம் கூறினோம், “பைத்துல் முகத்தஸின் வாயிலில் தலைகுனிந்து பணிந்தவர்களாக நுழையுங்கள்.” ஆனால் அவர்கள் தங்கள் பிட்டத்தால் தவழ்ந்தவாறு உள்ளே நுழைந்தார்கள். “சனிக்கிழமையில் வரம்புமீறி வேட்டையாடாதீர்கள்.” என்றும் நாம் அவர்களிடம் கூறினோம். ஆனால் அவர்கள் வரம்புமீறி வேட்டையாடினார்கள். அது சம்பந்தமாக நாம் அவர்களிடம் உறுதியான உடன்படிக்கை செய்திருந்தும், அவர்கள் அதனை மீறினார்கள்.