அல்-முக்தஸர்
فَبِمَا نَقْضِهِم مِّيثَـٰقَهُمْ وَكُفْرِهِم بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَقَتْلِهِمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَقَوْلِهِمْ قُلُوبُنَا غُلْفٌۢ ۚ بَلْ طَبَعَ ٱللَّهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا ﴿١٥٥﴾
அவர்கள் உறுதியான உடன்படிக்கையை முறித்ததனாலும் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததனாலும் இறைத்தூதர்களை துணிந்து கொலை செய்ததனாலும் முஹம்மதிடம், ‘எங்களின் உள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே நீர் கூறும் எதுவும் அதனை அடையப்போவதில்லை’ என்று கூறியதனாலும் நாம் அவர்களை நம் கருணையிலிருந்து தூரமாக்கிவிட்டோம். விஷயம் அவர்கள் கூறுவது போலல்ல. மாறாக அல்லாஹ் அவர்கள் நிராகரித்தனால் அவர்களது உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். எனவே எந்த நன்மையும் அவற்றை அடைந்துவிட முடியாது. அவர்களுக்குப் பயனளிக்காத அளவு குறைவாகவே அவர்கள் நம்பிக்கைகொள்வார்கள்.