அல்-முக்தஸர்
وَلَا تَنكِحُوا۟ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُۥ كَانَ فَـٰحِشَةً وَمَقْتًا وَسَآءَ سَبِيلًا ﴿٢٢﴾
உங்களின் தந்தையர் மணமுடித்துக்கொண்ட பெண்களை மணமுடித்துக் கொள்ளாதீர்கள். அது தடுக்கப்பட்டதாகும். ஆயினும் அறியாமைக் காலத்தில் நடந்துமுடிந்தவற்றைத்தவிர. அதற்காக நீங்கள் தண்டிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் அவ்வாறு மணமுடித்துக் கொள்வது மானக்கேடான காரியமாகவும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கக்கூடியதாகவும் தீய வழியாகவும் இருக்கின்றது.