அல்-முக்தஸர்
حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَـٰتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَٰتُكُمْ وَعَمَّـٰتُكُمْ وَخَـٰلَـٰتُكُمْ وَبَنَاتُ ٱلْأَخِ وَبَنَاتُ ٱلْأُخْتِ وَأُمَّهَـٰتُكُمُ ٱلَّـٰتِىٓ أَرْضَعْنَكُمْ وَأَخَوَٰتُكُم مِّنَ ٱلرَّضَـٰعَةِ وَأُمَّهَـٰتُ نِسَآئِكُمْ وَرَبَـٰٓئِبُكُمُ ٱلَّـٰتِى فِى حُجُورِكُم مِّن نِّسَآئِكُمُ ٱلَّـٰتِى دَخَلْتُم بِهِنَّ فَإِن لَّمْ تَكُونُوا۟ دَخَلْتُم بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَـٰٓئِلُ أَبْنَآئِكُمُ ٱلَّذِينَ مِنْ أَصْلَـٰبِكُمْ وَأَن تَجْمَعُوا۟ بَيْنَ ٱلْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا ﴿٢٣﴾
உங்களின் தாய், அதற்கு மேலுள்ள தாயின்தாய், அவளது தந்தைவழி அல்லது தாய்வழிப் பாட்டி, உங்களின் மகள்கள், அதற்குக் கீழுள்ள பேத்திகள், மகனின் பெண்பிள்ளைகள் அதற்குக் கீழுள்ளவர்கள், கூடப்பிறந்த அல்லது தாய் அல்லது தந்தைவழிச் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தந்தைவழிச் சகோதரிகள், தாயின் சகோதரிகள், உங்கள் பெற்றோரின் தாய்வழிச் சகோதரிகள், சகோதர சகோதரிகளின் பெண்பிள்ளைகளும் அவர்களது பிள்ளைகள், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித்தாய்மார்கள், உங்களின் பால்குடிச் சகோதரிகள், நீங்கள் உறவுகொண்ட அல்லது உறவுகொள்ளாத உங்கள் மனைவியரின் தாய்மார்கள், உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்து பெரும்பாலும் உங்களுடன் வீட்டில் வளரும் பிள்ளைகள், உங்கள் மகன்களின் மனைவியர் ஆகியோரை மணமுடித்துக் கொள்வது உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. உங்கள் மனைவியரின் முந்தைய கணவனுக்குப் பிறந்த மகள்கள் உங்கள் வீட்டில் வளரவில்லையென்றாலும் இதுதான் சட்டமாகும். ஆனால் நீங்கள் அவர்களின் தாயான உங்கள் மனைவியோடு இன்னும் உடலுறவு கொள்ளவில்லையெனில் அந்தப் பெண்களை மணமுடித்துக் கொள்ளலாம். உங்கள் சொந்த மகன்களின் மனைவிமார்களை அவர்கள் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும் திருமணம் செய்வது உங்களுக்குத் தடையாகும். உங்களது பால்குடி மகன்களுக்கும் இதே சட்டமாகும். இரண்டு சகோதரிகளை சேர்த்து மணமுடிப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது. பால்குடி சகோதரிகளுக்கும் இதே சட்டம்தான். அறியாமைக் காலத்தில் நடந்து முடிந்த இது போன்றவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அதேபோல் ஒரு பெண்ணையும் அவளது பெற்றோரின் சகோதரிகளில் ஒருவரையும் ஏககாலத்தில் மனைவியாக வைத்திருப்பது நபிவழியின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது,