×
النساءவசனம் 24

அல்-முக்தஸர்

وَٱلْمُحْصَنَـٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَـٰنُكُمْ ۖ كِتَـٰبَ ٱللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا۟ بِأَمْوَٰلِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَـٰفِحِينَ ۚ فَمَا ٱسْتَمْتَعْتُم بِهِۦ مِنْهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَٰضَيْتُم بِهِۦ مِنۢ بَعْدِ ٱلْفَرِيضَةِ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ﴿٢٤﴾

திருமண உறவில் இருக்கும் பெண்களையும் மணமுடித்துக் கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆனால் போரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு நீங்கள் உரிமையாக்கிக் கொண்ட அடிமைப்பெண்கள் இதிலிருந்து விதிவிலக்காவார்கள். அவர்கள் கருத்தரிக்கவில்லை என்பதை ஒரு மாதவிடாயின் மூலம் உறுதிசெய்த பின் நீங்கள் அவர்களுடன் உறவுவைத்துக் கொள்ளலாம். மேற்கூறப்பட்டவை அனைத்தும் அல்லாஹ் உங்கள்மீது விதித்த சட்டங்களாகும். மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்ற பெண்களை நீங்கள் உங்கள் செல்வங்களின் மூலம் விபச்சாரத்தைத் தவிர்ந்து உங்களது கற்பைப் பாதுகாத்துக்கொள்வதற்காக திருமணம் செய்வதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். நீங்கள் மணமுடித்து அனுபவித்த பெண்களுக்கு அல்லாஹ் உங்கள்மீது கடமையாக்கிய மணக்கொடையை அளித்துவிடுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகப் பேசி மணக்கொடையை கூட்டிக்கொள்வதிலோ குறைத்துக் கொள்வதிலோ உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் படைத்தவற்றைக் குறித்து நன்கறிந்தவன். அவர்களைக் குறித்து எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தனது நிர்வகித்தல் மற்றும் சட்டமியற்றுதல் போன்றவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.