×
النساءவசனம் 25

அல்-முக்தஸர்

وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ ٱلْمُحْصَنَـٰتِ ٱلْمُؤْمِنَـٰتِ فَمِن مَّا مَلَكَتْ أَيْمَـٰنُكُم مِّن فَتَيَـٰتِكُمُ ٱلْمُؤْمِنَـٰتِ ۚ وَٱللَّهُ أَعْلَمُ بِإِيمَـٰنِكُم ۚ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ ۚ فَٱنكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَءَاتُوهُنَّ أُجُورَهُنَّ بِٱلْمَعْرُوفِ مُحْصَنَـٰتٍ غَيْرَ مُسَـٰفِحَـٰتٍ وَلَا مُتَّخِذَٰتِ أَخْدَانٍ ۚ فَإِذَآ أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَـٰحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى ٱلْمُحْصَنَـٰتِ مِنَ ٱلْعَذَابِ ۚ ذَٰلِكَ لِمَنْ خَشِىَ ٱلْعَنَتَ مِنكُمْ ۚ وَأَن تَصْبِرُوا۟ خَيْرٌ لَّكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٢٥﴾

ஆண்களே! உங்களில் போதுமான செல்வத்தைப் பெறாததால் சுதந்திரமான பெண்களை மணமுடிக்க சக்திபெறாதவர் மற்றவர்களுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களில் இறைநம்பிக்கையுடையோராக நீங்கள் கருதுவோரை மணமுடித்துக் கொள்ளலாம். உங்களின் ஈமானின் உண்மை நிலையையும் உங்கள் நிலமைகளின் உள்ரங்கங்களையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன். நீங்களும் அவர்களும் மார்க்க அடிப்படையிலும் மனிதர்கள் என்ற அடிப்படையிலும் சமமானவர்களே. எனவே அவர்களைத் திருமணம் செய்வதை வெறுப்பாகக் கருத வேண்டியதில்லை. அவர்களுடைய உரிமையாளர்களின் அனுமதியோடு, அவர்களுக்கு அளிக்க வேண்டிய மணக்கொடையை குறைவின்றியும் தாமதப்படுத்தாமலும் அளித்து மணந்துகொள்ளுங்கள். அந்த அடிமைப் பெண்கள் வெளிப்படையாக விபச்சாரத்தில் ஈடுபடாத, மறைமுகமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கள்ளக்காதலர்களை ஏற்படுத்தாத கற்பொழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் திருமணமானபிறகு விபச்சாரத்தில் ஈடுபட்டால் சுதந்திரமான பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதியான ஐம்பது கசையடிகள் அடிக்கப்பட வேண்டும். அவர்கள் திருமணம் செய்த சுதந்திரமான பெண்களைப் போன்று கல்லெறிந்து கொல்லப்பட மாட்டார்கள். நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண்களை மணந்துகொள்ளலாம் என்ற அனுமதி தாம் விபச்சாரத்தில் விழுந்துவிடுவோம் என்ற அச்சத்துடன் சுதந்திரப் பெண்களைத் திருமணம் செய்வதற்கு வசதியற்றவர்களுக்கு மாத்திரமே. அடிமைப்பெண்களை மணமுடித்து அடிமைக் குழந்தைகளைப் பெறாதிருக்கும் பொருட்டு அவர்களை மணமுடிக்காமல் பொறுமையாக இருப்பதே உங்களுக்குச் சிறந்ததாகும். தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். உங்களில் சுதந்திரமான பெண்களை மணக்க இயலாதவர்களுக்கு அடிமைப்பெண்களை மணக்க அனுமதித்ததும் அவனது கருணையின் வெளிப்பாடுதான்.