×
النساءவசனம் 32

அல்-முக்தஸர்

وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبُوا۟ ۖ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ ۚ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا ﴿٣٢﴾

நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலரை சிலரை விட அல்லாஹ் மேன்மையாக்கியுள்ள விஷயங்களில் ஆசைகொள்ளாதீர்கள். அது கோபத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தும். அல்லாஹ் ஆண்களுக்கு பிரத்யேகமாக வழங்கியுள்ள சிறப்புகளில் ஆசைகொள்வது பெண்களுக்கு உகந்ததல்ல. ஒவ்வொரு சாராருக்கும் கூலியில் அவரவருக்குப் பொருத்தமான பங்குண்டு. தனது அருட்கொடையிலிருந்து அதிகரித்து வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.எனவேதான் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதை அவன் வழங்கியுள்ளான்.