×
النساءவசனம் 33

அல்-முக்தஸர்

وَلِكُلٍّ جَعَلْنَا مَوَٰلِىَ مِمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ ۚ وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَـٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدًا ﴿٣٣﴾

உங்களில் ஒவ்வொருவருக்கும் தாய்தந்தையர், உறவினர் விட்டுச்சென்ற சொத்தில் பங்குகளைப் பெறும் அனந்தரக்காரர்களை ஆக்கியுள்ளோம். யாருடன் நீங்கள் உறுதிமிக்க சத்தியங்கள் ஊடாக உதவி மற்றும் கூட்டிணைப்பு என்பவற்றுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களின் அனந்தரப் பங்கினையும் அவர்களுக்கு அளித்துவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களது இந்த சத்தியங்களையும் ஒப்பந்தங்களையும் அவன் கவனித்துக்கொண்டே இருக்கிறான். கூட்டினையப்பின் காரணமாக அனந்தரச் சொத்து பெறுவது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் அது ரத்துச்செய்யப்பட்டுவிட்டது.