அல்-முக்தஸர்
وَٱللَّهُ أَعْلَمُ بِأَعْدَآئِكُمْ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِٱللَّهِ نَصِيرًا ﴿٤٥﴾
நம்பிக்கையாளர்களே! உங்கள் எதிரிகளை உங்களைவிட அல்லாஹ் நன்கறிவான். அதனால்தான் அவன் அவர்களைக் குறித்து உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளான். அவர்களின் பகைமையை வெளிப்படுத்திவிட்டான். அவர்களின் தாக்குதலிலிருந்து உங்களைக் காக்கும் பாதுகாவலனாக இருப்பதற்கும் அவர்களின் சூழ்ச்சியையும் நோவினையையும் உங்களைவிட்டும் தடுத்து அவர்களுக்கெதிராக உங்களுக்கு உதவிசெய்வதற்கும் அல்லாஹ்வே போதுமானவனாவான்.