×
النساءவசனம் 46

அல்-முக்தஸர்

مِّنَ ٱلَّذِينَ هَادُوا۟ يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَيَقُولُونَ سَمِعْنَا وَعَصَيْنَا وَٱسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَرَٰعِنَا لَيًّۢا بِأَلْسِنَتِهِمْ وَطَعْنًا فِى ٱلدِّينِ ۚ وَلَوْ أَنَّهُمْ قَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا وَٱسْمَعْ وَٱنظُرْنَا لَكَانَ خَيْرًا لَّهُمْ وَأَقْوَمَ وَلَـٰكِن لَّعَنَهُمُ ٱللَّهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُونَ إِلَّا قَلِيلًا ﴿٤٦﴾

அல்லாஹ் இறக்கிய அவனது வார்த்தையை மாற்றுபவர்களும் யூதர்களில் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் இறக்கியதற்கு மாறாக விளக்கமளிக்கிறார்கள். தூதர் ஏதேனும் விஷயத்தைக் கொண்டு அவர்களுக்குக் கட்டளையிட்டால், “உமது பேச்சை கேட்டுக் கொண்டோம். ஆனால் உமக்குக் கீழ்ப்படிய மாட்டோம். நாங்கள் சொல்வதைக் கேட்பீராக. உமது பேச்சு கேட்கப்படாது“ என்று கூறி பரிகாசம் செய்கிறார்கள். அவர்கள் எங்களது பேச்சை செவிமடுப்பீராக என்ற கருத்தையுடைய ‘ராயினா’ என்ற வார்த்தையைக் கூறுவது போன்று பாசாங்குசெய்து அதன் மூலம் தூதருக்கு சாபமிட நாடுகிறார்கள். மார்க்கத்தில் குறைகாண நாடுகிறார்கள். இவற்றுக்குப் பதிலாக அவர்கள், “நாங்கள் உமது பேச்சை செவியுற்றோம். நீர் கூறும் விஷயத்திற்குக் கட்டுப்பட்டோம், நீர் கேட்பீராக” என்றும் ‘ராயினா’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இன்தளிர்னா - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள எங்களுக்காக காத்திருங்கள்’ என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும் நியாயமானதாகவும் அமைந்திருக்கும்.ஏனெனில் அதுவே நபியவர்களுடன் அவர்களது தகுதிக்குப் பொருத்தமான அழகிய நடத்தையாகும். ஆயினும் அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். அவர்களின் நிராகரிப்பினால் தன் அருளிலிருந்து அவர்களைத் தூரமாக்கிவிட்டான். தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.