×
النساءவசனம் 60

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ ءَامَنُوا۟ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓا۟ إِلَى ٱلطَّـٰغُوتِ وَقَدْ أُمِرُوٓا۟ أَن يَكْفُرُوا۟ بِهِۦ وَيُرِيدُ ٱلشَّيْطَـٰنُ أَن يُضِلَّهُمْ ضَلَـٰلًۢا بَعِيدًا ﴿٦٠﴾

தூதரே! “உம்மீது இறக்கப்பட்டதன் மீதும் உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம்” என்று பொய்யாக வாதிடும் யூதர்களிலுள்ள நயவஞ்சகர்களது முரண்பாட்டை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் அல்லாஹ்வின் சட்டங்களை விட்டுவிட்டு மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிடம் தீர்வு தேடுகிறார்கள். அவற்றை நிராகரிக்கும்படியே அவர்கள் ஏவப்பட்டிருந்தார்கள். அவர்கள் சத்தியத்தை அடையமுடியாத அளவு ஷைத்தான் அவர்களை அதனை விட்டும் வெகுதூரமாக்க விரும்புகிறான்.