×
النساءவசனம் 61

அல்-முக்தஸர்

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيْتَ ٱلْمُنَـٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا ﴿٦١﴾

தூதரே! இந்த நயவஞ்சகர்களிடம், “உங்களிடையேயுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்திலுள்ள தீர்ப்பின் பக்கமும், உங்களது பிரச்சினையில் தீர்ப்பு வழங்குவதற்காக தூதரின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால் உம்மைப் முழுமையாகப் புறக்கணித்துவிட்டு தீர்வுதேடி மற்றவர்களிடம் செல்வதை நீர் காண்பீர்.