×
النساءவசனம் 7

அல்-முக்தஸர்

لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ ۚ نَصِيبًا مَّفْرُوضًا ﴿٧﴾

தாய்தந்தையர், சகோதரர்கள் மற்றும் தந்தையின் சகோதரர்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் இறந்த பின் விட்டுச் சென்ற சொத்து குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும், அவற்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு உண்டு. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்காலத்தில் பெண்களும் குழந்தைகளும் வாரிசு சொத்துகளை விட்டுத் தடுக்கப்பட்டது போன்றில்லாமல் மேற்கூறிய உறவினர்கள் விட்டுச்சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இந்த பங்கு அல்லாஹ்வால் தெளிவுபடுத்தப்பட்டு அளவு நிர்ணயிக்கப்பட்ட உரிமையாகும்.