×
النساءவசனம் 8

அல்-முக்தஸர்

وَإِذَا حَضَرَ ٱلْقِسْمَةَ أُو۟لُوا۟ ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينُ فَٱرْزُقُوهُم مِّنْهُ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا ﴿٨﴾

சொத்து பங்கிடப்படும்போது அநந்தரம் பெறாத உறவினர்கள், ஏழைகள், அநாதைகள் அங்கு வந்தால், அதனைப் பங்கிட முன் மனமுவந்து அவர்களுக்கும் உபரியாக அதிலிருந்து அளியுங்கள். ஏனெனில் அவர்கள் அதனை எதிர்பார்க்கின்றனர். இந்தச் சொத்தும் உங்களுக்கு சிரமமின்றி கிடைத்துள்ளது. அவர்களிடம் அசிங்கமற்ற நல்லவார்த்தைகளைக் கூறுங்கள்.