×
النساءவசனம் 9

அல்-முக்தஸர்

وَلْيَخْشَ ٱلَّذِينَ لَوْ تَرَكُوا۟ مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَـٰفًا خَافُوا۟ عَلَيْهِمْ فَلْيَتَّقُوا۟ ٱللَّهَ وَلْيَقُولُوا۟ قَوْلًا سَدِيدًا ﴿٩﴾

தாங்கள் இறந்துவிட்டால் தங்களின் பலவீனமான குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று அஞ்சுபவர்களைப்போல உங்களின் பொறுப்பில் இருக்கும் அநாதைக் குழந்தைகளின் விஷயத்திலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதி இழைத்துவிடாதீர்கள். அப்பொழுதுதான் அல்லாஹ் அவர்கள் எவ்வாறு நல்லமுறையில் நடந்து கொண்டனரோ அவ்வாறே அவர்களது பிள்ளைகளுடனும் நல்ல முறையில் நடந்துகோள்வோரை ஏற்படுத்துவான். உயில் எழுதுபவரது பிள்ளைகளின் விடயத்திலும் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். எனவே உயில் எழுதுபவர்களிடம் தமக்குப் பின்னுள்ள அநந்தரக்காரர்களுக்கு தமது உயிலில் அநீதி இழைக்காதிருக்கும் படியும் உயில் எழுதாமல் தம்மை நன்மையிலிருந்து தடுத்துக்கொள்ளாதிருக்கும் படியும் நேர்த்தியான வார்த்தைகளைக் கூறுங்கள்.