×
النساءவசனம் 90

அல்-முக்தஸர்

إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَـٰقٌ أَوْ جَآءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَن يُقَـٰتِلُوكُمْ أَوْ يُقَـٰتِلُوا۟ قَوْمَهُمْ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَـٰتَلُوكُمْ ۚ فَإِنِ ٱعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَـٰتِلُوكُمْ وَأَلْقَوْا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا ﴿٩٠﴾

ஆயினும் நீங்கள் யாருடன் போர் நிறுத்தத்திற்கான உறுதியான ஒப்பந்தம் செய்துகொண்டீர்களோ அவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களைத்தவிர. அல்லது மனநெருக்கடியால் உங்களுடனோ தங்கள் கூட்டத்துடனோ போரிட விரும்பாமல் உங்களிடம் வந்தவர்களைதவிர. அல்லாஹ் நாடினால் அவர்களை உங்கள்மீது ஆதிக்கம் செலுத்த வைத்திருப்பான். அவர்கள் உங்களுடன் போரிட்டிருப்பார்கள். அல்லாஹ் வழங்கிய ஆரோக்கியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர்களைக் கொலைசெய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ வேண்டாம். அவர்கள் உங்களைவிட்டும் ஒதுங்கி உங்களுக்கு எதிராகப் போரிடாமல், சமாதானம் கோரியோராக உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களைக் கொலை செய்யவோ கைதிகளாகப் பிடிக்கவோ அல்லாஹ் உங்களுக்கு எந்த வழியையும் ஏற்படுத்தவில்லை.