அல்-முக்தஸர்
سَتَجِدُونَ ءَاخَرِينَ يُرِيدُونَ أَن يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا۟ قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوٓا۟ إِلَى ٱلْفِتْنَةِ أُرْكِسُوا۟ فِيهَا ۚ فَإِن لَّمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوٓا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ وَيَكُفُّوٓا۟ أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَٱقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ ۚ وَأُو۟لَـٰٓئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَـٰنًا مُّبِينًا ﴿٩١﴾
நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் தமது உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக உங்களிடம் ஈமானை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் சமூகத்தவரிடம் தப்பித்துக்கொள்வதற்காக அவர்களிடம் செல்லும்போது நிராகரிப்பை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதன் பக்கமும், அவனுக்கு இணைகற்பிப்பதன் பக்கமும் அழைக்கப்பட்டால் உடனே பதிலளித்துவிடுகிறார்கள். இவர்கள் உங்களுக்கு எதிராகப் போரிடாமல் விலகவில்லை; சமாதானம் கோரி உங்களிடம் அடிபணிந்தவர்களாக வரவில்லை; உங்களை விட்டும் தங்கள் கைகளைத் தடுத்துக்கொள்ளவில்லை. எனவே இவர்களைக் கண்ட இடத்தில் பிடித்துக் கொலை செய்யுங்கள். இப்படிப்பட்ட பண்புடையவர்களை அவர்களின் துரோகம், சூழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக நீங்கள் பிடித்துக் கொலை செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை நாம் வழங்கிவிட்டோம்.