×
النساءவசனம் 94

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا ضَرَبْتُمْ فِى سَبِيلِ ٱللَّهِ فَتَبَيَّنُوا۟ وَلَا تَقُولُوا۟ لِمَنْ أَلْقَىٰٓ إِلَيْكُمُ ٱلسَّلَـٰمَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا فَعِندَ ٱللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ ۚ كَذَٰلِكَ كُنتُم مِّن قَبْلُ فَمَنَّ ٱللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا ﴿٩٤﴾

அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போருக்காகப் புறப்பட்டால் நீங்கள் எதிர்த்துப் போரிடுவோர் விடயத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் இஸ்லாத்தை வெளிப்படுத்தியவரைப் பார்த்து, “நீ நம்பிக்கையாளன் அல்ல. உயிர், பொருளின் மீதுள்ள பயத்தினால்தான் இஸ்லாத்தை வெளிப்படுத்துகிறாய்” என்று கூறி, இவ்வுலகின் அற்ப ஆதாயமான போர்ச் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொலை செய்துவிடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன. அவை இவற்றைவிடச் சிறந்ததாகும். இதற்கு முன்னர் நீங்களும் தனது கூட்டத்தை விட்டும் தனது ஈமானை மறைக்கும் இவரைப் போன்றுதான் இருந்தீர்கள். அல்லாஹ் இஸ்லாத்தை வழங்கி உங்கள்மீது கிருபை செய்து உங்களது உயிர்களைப் பாதுகாத்தான். எனவே நன்கு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களின் எவ்வளவு சிறிய செயலும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.