×
النساءவசனம் 95

அல்-முக்தஸர்

لَّا يَسْتَوِى ٱلْقَـٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَـٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَـٰعِدِينَ دَرَجَةً ۚ وَكُلًّا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ ۚ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَـٰهِدِينَ عَلَى ٱلْقَـٰعِدِينَ أَجْرًا عَظِيمًا ﴿٩٥﴾

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யாமல் பின்தங்கிய நம்பிக்கையாளர்களும் - நோய், பார்வையின்மை போன்ற காரணங்களால் பின்தங்கியவர்களைத்தவிர - அவனுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாதுசெய்தவர்களும் சமமாக மாட்டார்கள். போரைவிட்டு பின்தங்கியிருப்பவர்களைவிட தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்பவர்களை அந்தஸ்தில் அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முஜாஹிதுகள்,தகுந்த காரணத்தினால் பின்தங்குபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் அவர்களுக்குத் தகுந்த கூலியை வைத்துள்ளான்.பின்தங்குபவர்களை விட முஜாஹிதுகளுக்கு அல்லாஹ் பெரும் நன்மைகளை வழங்கி சிறப்பித்துள்ளான்.