×
المائدةவசனம் 104

அல்-முக்தஸர்

وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ قَالُوا۟ حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ ءَابَآءَنَآ ۚ أَوَلَوْ كَانَ ءَابَآؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْـًٔا وَلَا يَهْتَدُونَ ﴿١٠٤﴾

சில கால்நடைகளைத் தடைசெய்வதன் மூலம் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறும் இவர்களிடம், “அனுமதிக்கப்பட்டவற்றையும் தடைசெய்யப்பட்டவற்றையும் அறிந்துகொள்வதற்காக அல்லாஹ் இறக்கிய குர்ஆனின் பக்கமும் தூதரின் நடைமுறையின் பக்கமும் வாருங்கள்” என்று கூறப்பட்டால், “எங்கள் முன்னோர்களிடமிருந்து நாங்கள் அனந்தரமாகப் பெற்ற கொள்கைகளும், வார்த்தைகளும் நடைமுறைகளுமே, எங்களுக்குப் போதுமானவை” என்று கூறுகிறார்கள். அவை எவ்வாறு அவர்களுக்குப் போதுமானதாக இருக்க முடியும்? அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவுமல்லவா இருந்தனர்! எனவே அவர்களையும் விட மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களைப் பின்பற்றமாட்டார்கள். அவர்கள் மூடர்களாகவும் வழிகெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்.