×
المائدةவசனம் 105

அல்-முக்தஸர்

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ عَلَيْكُمْ أَنفُسَكُمْ ۖ لَا يَضُرُّكُم مَّن ضَلَّ إِذَا ٱهْتَدَيْتُمْ ۚ إِلَى ٱللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٠٥﴾

அல்லாஹ்வை உண்மைப்படுத்தி, அவனுடைய தூதரைப் பின்பற்றி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்களைப் பற்றிக் கவலைப்படுங்கள்; உங்களை நீங்கள் சீர்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழியில் இருந்தால் மக்களின் வழிகேட்டால் உங்களுக்குத் தீங்கு நேராது. நீங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளிகள் அல்ல. நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் நீங்களை நேர்வழியில் இருப்பதற்கான அடையாளமேயாகும். மறுமைநாளில் அல்லாஹ்விடமே நீங்கள் திரும்ப வேண்டும். இவ்வுலகில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.